“மிகவும் விருப்பமான நாடு” நிலையை ரஸ்யா இழந்துவிடும் ஆபத்து! சில மணித்தியாலங்களில் அறிவிப்பு!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து, ரஸ்யா வகிக்கும் மிகவும் விருப்பமான நாடு" வர்த்த நிலையை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏழு நாடுகளின் குழு ரத்துச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதனை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களின் கீழ், "மிகவும் விருப்பமான நாட்டின்” மீது பொதுவாக பாகுபாடு காட்டப்படவோ அல்லது அவற்றின் சந்தைகளுக்கான அணுகலை மட்டுப்படுத்தவோ முடியாது.
இந்தநிலையில் ரஸ்யாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையால், பொருளாதார தடைகளுக்கு அப்பால் ரஷ்ய பொருட்களுக்கு வரிகளை விதிக்க வழியை ஏற்படுத்தும்.
முன்னதாக, ரஷ்யாவில் தமது செயற்பாட்டை நிறுத்திய வணிகங்களின் சொத்துக்களை மொஸ்கோ நிர்வாகம் கைப்பற்றக்கூடும் என்ற செய்திகளை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது.