உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஸ்யாவின் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி!
உக்ரைனின் கிழக்கு நகரமான ரூபிஸ்னேவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட்ட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய இராணுவம் எறிகனை தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாடிக்குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் ஒரு எறிகனை வீழ்ந்து வெடித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் பெப்ரவரி 24 அன்று படையெடுப்பு ஆரம்பத்ததில் இருந்து 60 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ரஷ்யப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மரியுபோல் இலக்காக அமைந்துள்ளது.
இந்தநிலையில் அங்கு இன்னும் ஒரு லட்சம் பேர் மனிதாபிமானமற்ற சூழ்நிலைகளில் சிக்கியுள்ளனர் என்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார்.
ரஸ்ய படைகள் அங்கு மக்களை சரணடைமாறு கோரி, மனிதாபிமான வழிகளை மூடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan