விபத்தில் பலியான ரஷ்ய பெண்
மணல் ஏற்றிச் செல்லும் டிப்பர் வண்டியில் மோதுண்டு ரஷ்ய பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அஹங்கம நகரில் நேற்று மாலை நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
38 வயதான ரஷ்ய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் கடவுச்சீட்டின் மூலம் பெண்ணை அடையாளம் கண்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் கூறியுள்ளனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி மோட்டார் சைக்கிளில் ரஷ்ய பெண் சென்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்னால் சென்ற டிப்பர் வண்டியின் இடது பக்கமாக முந்தி செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதி, ரஷ்ய பெண் வீதியில் விழுந்துள்ளதுடன் டிப்பர் வண்டி பெண் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ரஷ்ய பெண் உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ரஷ்ய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam