ரஷ்யாவின் பலத்த தாக்குதல்: உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்
உக்ரைன் (Ukraine) மீது 60 ட்ரோன்கள் மற்றும் 5 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா சரமாரியாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த தாக்குதல்களின் போது, சுமார் 20 ட்ரோன்களை ஏவுவதற்கு முன்னரே தாம் தடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் கிவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலின் போது, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 05 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷ்ய போர்
அதுமாத்திரமின்றி, இந்த தாக்குதலில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வசிக்கும் நகரில் உள்ள இரண்டு மாடி கட்டிமும் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி, உக்ரைன் மீது முன்னதாகவே, அதாவது போரினை நடத்த தீர்மானித்த பொழுதே படையெடுத்து தாக்குதல்களை நடத்தியிருக்க வேண்டும் என ஊடக மாநாடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் நிதி மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் குறித்த போர் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், 2022ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு படைகளை அனுப்புவது தனது நாட்டின் இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை உயர்த்தியுள்ளது என்று புடின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |