இலங்கையில் வீதி விபத்தில் சிக்கிய வெளிநாட்டு தம்பதி
கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி மற்றும் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தம்பதியரும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (09.08.2023) முச்சக்கரவண்டி ஒன்று மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸாரின் அறிவிப்பு
ரஷ்ய தம்பதியரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாகவும், அவர்கள் ஹிக்கடுவ பிரதேசத்திற்கு வஸ்கடுவவிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் இருந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
