உக்ரைனுக்கு ஆதரவளித்ததால் பிரித்தானியாவை நெருங்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவில் களமிறக்குவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது உயிரை மாய்த்துக்கொள்ள தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவில் களமிறக்க ரஷ்யா தயாராகி வருவதாக சில மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மின்னஞ்சல்கள் சிலவற்றில் இருந்து தெரியவந்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சல் தகவல்கள்
இந்நிலையில் பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவளிப்பதால், ரஷ்யாவின் முக்கிய இலக்காகியுள்ளதாக முன்னாள் பிரித்தானிய உளவுத்துறை அலுவலரான Annie Machon கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவளிப்பதால், பிரித்தானியாவிலிருந்து முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக உளவாளிகளை இறக்க ரஷ்யா தீவிரமாக முயற்சிக்கலாம்.
பிரித்தானியாவில் வாழும், ரஷ்யா மீது பரிதாபம் கொண்டவர்கள் அல்லது ரஷ்யா பக்கம் ஆதரவு காட்டுபவர்களையும், முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களையும் இழுத்து உளவாளிகளாக ஆக்கிக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம். இப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வழியில் இழுத்துக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம்.
அதாவது, பெண்கள் மூலமாக மயக்கியோ, வெளிநாடு செல்பவர்களிடம் பெருந்தொகையைக் கண்ணில் காட்டி, எங்களுக்காக உளவு பார்த்தால் எக்கச்சக்கமாக பணம் தருவோம் என்று ஆசை காட்டியோ மக்களை உளவு பார்க்கத் தூண்டலாம்.
பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
மேலும், ரஷ்யாவில் வாழும் ஒரு பிரித்தானியரை, அவருக்கு பிரச்சினை என்பது போன்ற ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி, பிறகு ஒருவர் அவருக்கு உதவுவது போல அவரை அணுகி, உனக்கு நாங்கள் உதவுகிறோம், பதிலுக்கு நீ எங்களுக்கு இதைச் செய்ய வேண்டும் என அவரைக் கேட்டு உளவு பார்க்கவைப்பது, இப்படி பல்வேறு வகையில் மக்களை உளவு பார்ப்பதற்கு தயார் செய்ய ரஷ்யா முயற்சித்து வருகின்றது.”என கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நான்கு ரஷ்ய உளவாளிகள் இருப்பதாக முன்னாள் ரஷ்ய உளவாளியான Boris Karpichkov என்பவர் கூறியுள்ளார்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.