ஐரோப்பா முழுவதும் பலர் உயிரிழக்கும் அபாயம்! நேட்டோவை கடுமையாக எச்சரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி
மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கடும் தொனியில் நேட்டோ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் , ரஷ்யாவில் உக்ரைன் பெரும் தாக்குதலை நடத்தியதனால், மாஸ்கோவில் விமான போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேட்டோவுடனான முரண்பாடுகளே காரணம்
உக்ரைன் மீது போர் தொடுத்ததிற்கும் நேட்டோவுடனான முரண்பாடுகளே காரணம் என்பது ஆச்சரியமானது.
நேட்டோவில் இணைய உக்ரைன் முன்வந்ததையடுத்து ரஷ்யா போரை முன்னெடுத்ததாக நேட்டோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போரின் தாக்கம் உக்ரைன் நாட்டு பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |