ரஸ்ய விமான தடுப்பு சம்பவம்: பணி இடைநிறுத்தப்பட்ட அதிகாரி
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் நிதி அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ரஸ்யாவின் ஏரோபுளோட் விமானத்தை தடுத்து வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் நிதி அதிகாரி நீதி அமைச்சினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
விமான தடுப்பு சம்பவம்

ஏரோபுளோட் விமான விவகாரம் தொடர்பில் நேற்று(6) கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, "இந்த விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்தவுடன், ஜூன் 2 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவை தவறுதலாக தெரிவித்த நிதி அதிகாரி மற்றும் சட்டத்தரணிக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

"நிதி அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நீதி சேவைகள் ஆணைக்குழுவின் பொறுப்பு" என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை "இவ்வாறான உணர்வுப்பூர்வமான வழக்குக்காக முன்னிலையாகும் போது, வழக்கறிஞர் பிரச்சினையின் தீவிரத்தன்மை மற்றும் அவரது செயல்களின் சாத்தியமான விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam