சர்ச்சையை கிளப்பிய ரஷ்ய விமான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ரஷ்யாவின் ஏரோபுளொட் விமானம் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்து உத்தரவு பிறப்பிப்பதற்கு ஏதுவாய் அமைந்த வழக்கை, நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளது.
குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அயர்லாந்து நிறுவனமொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தனவினாலும் பிரதிவாதி தரப்பான ரஷ்ய நிறுவனத்தினாலும் இன்று சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கை பரிசிலீத்த கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 26 நிமிடங்கள் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
