நடுவானில் ஏற்பட்டுள்ள குழப்பம்! ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த ஜெட் விமானங்கள்
நோட்டோ வான்வெளிக்கு அருகில் 2 ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் 1 உளவு விமானத்தை RAF விமானிகள் இடைமறித்துள்ளனர்.
கலினின்கிராட்டை(Kaliningrad)தளமாகக் கொண்ட இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்டோனிய விமான மண்டலத்தின் வடமேற்கு பகுதி வழியாக தெற்கே பறந்துள்ளது.
ஜேர்மன் விமானப்படையுடன் கூட்டுப் பணியில் ஈடுபட்டு இருந்த RAF விமானிகள், பின்லாந்து வளைகுடாவில் பறந்த மூன்று ரஷ்ய விமானங்களை இடைமறித்தனர்.
ரஷ்ய இராணுவ விமானம்
ரஷ்யாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து போலந்துக்கு அருகில் உள்ள கலினின்கிராட் என்க்ளேவ் பகுதிக்கு பறந்து கொண்டிருந்த ரஷ்ய உளவுத்துறை விமானம் ஒன்று என அடையாளம் காணப்பட்டதாக RAF(Royal Air Force) தெரிவித்துள்ளது.
மேலும் அடிக்கடி ரஷ்ய இராணுவ விமானம் பால்டிக் கடல் மீது பறப்பதைப் பார்க்கிறோம், எனவே இது எங்களுக்கு ஒரு வழக்கமான இடைமறிப்பு என தெரிவித்துள்ளனர்.
RAF மற்றும் ஜெர்மன் டைஃபூன்கள் விமானத்தை ஸ்வீடன் விமானப்படையிடம் ஒப்படைப்பதற்கு முன் அப்பகுதி வழியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.