இரண்டு சிறுவர்களின் செயலால் வெடித்து சிதறிய ரஷ்ய இராணுவ ஹெலிகொப்டர்
ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றுக்குள் நுழைந்த இரண்டு சிறுவர்கள் அதனை வெடிக்க வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் நோயாப்ர்ஸ்க் (Noyabrsk) விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பாடசாலை சிறுவர்கள் இருவர் குறித்த ஹெலிகொப்டருக்குள் நுழைந்து விளையாடியுள்ளதோடு அங்கு எரியக்கூடிய திரவம் ஒன்றையும் ஊற்றியுள்ளனர்.
இருவரும் கைது
அங்கு புகைப்பிடித்த சிறுவர்கள் இருவரும் சிகரெட்டை ஹெலிகொப்டருக்குள் வீசியுள்ளனர். உடனே, ஹெலிகொப்டர் எரிய தொடங்கி நிலையில், சிறுவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, ஹெலிகொப்டர் வெடித்து சிதறியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹெலிகொப்டரை சேதப்படுத்த எவரேனும் அந்த சிறுவர்கள் இருவரையும் தூண்டினார்களா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ஊடுருவல்
உக்ரைன் ரஷ்யாவுக்குள் ஊடுருவியதையடுத்து, மொத்தமாக ரஷ்யா, அதன் 144 ஹெலிகொப்டர்களை இழந்துள்ளது.
இதில் 112 மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என்றும், 30 ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ளது என்றும், இரண்டு எண்ணிக்கை உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |