ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) ஆகிய இரு தரப்புக்களில் இருந்தும் 103 போர் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்த நடவடிக்கை காரணமாகவே குறித்த கைதி பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் கீழ் ஓகஸ்ட் மாதம் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் நுழைந்த சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வீடு திரும்பியவர்கள்
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய இரு தரப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, வீடு திரும்பிய 103 உக்ரேனியர்களில், 38 பேர் உக்ரேனிய தேசிய காவலர்கள் எனவும் எட்டு பேர் நாட்டின் எல்லைக் காவலர்கள் எனவும், நான்கு பேர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒருவர் மீட்பவர் எனவும் உள்துறை தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |