போர் பதற்றத்திற்கு மத்தியில் அவசரமாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய துணை பிரதமர்
ரஷ்யாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக மந்திரியான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் ரஷ்ய துணை பிரதமரின் திடீர் பயணம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார நடவடிக்கை
இந்த நிலையில், இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், இந்த பயணத்தின் முதல் நாளில் ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷ்யா சார்பில் தலைமையேற்கவுள்ளார்.
இந்த கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசிய இவர் நாளை நடைபெறவுள்ள இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24ஆவது ஐ.ஜி.சி. கூட்டம் பற்றி இறுதி முடிவு செய்யப்படவுள்ளது.