ரஸ்யாவிற்கு பதிலடி கொடுக்க தயார்! - அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கை (VIDEO)
உக்ரைன் மீதான ரஸ்யாவின் தாக்குதல் அச்சம் இன்னும் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் ஆரம்பித்தால், அதன் காரணமாக ஏற்படப்போகும் மனித சேதங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று அவர் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஸ்யாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா தீர்க்கமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் எல்லையில் ரஸ்யா தற்போது சுமார் 150,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
ரஸ்யா, நேற்று தமது படைப்பிரிவுகள் சிலவற்றை உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டபோதும், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பைடன் குறிப்பிட்டார்.
எனினும் அவர்கள் அச்சுறுத்தும் நிலையில் இன்னும் இருப்பதாக தமது ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் என்று பைடன் தெரிவித்தார்.
உக்ரைன் விடயத்தில் மொஸ்கோவின் கரிசனைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டும் என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் பைடனின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam