ஐ.நாவில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் - ரஸ்யா
ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என ரஸ்யா அறிவித்துள்ளது.
ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லெவ்ரொவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கோவிட் கட்டுப்பாடு, இரு தரப்பு உறவுகள், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு, மனிதாபிமான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்தாலோசித்துள்ளனர்.
இதேவேளை, கோவிட் பெருந்தொற்றினால் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையின் போது ரஸ்யாவின் ஆதரவு வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக்வீ தடுப்பூசி பகிர்வு போன்ற பல்வேறு விடயங்களில் ரஸ்யா உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri