அமெரிக்க ஆதரவாளர்களின் இரையாக மாறிய ரணில்: சமிந்த விஜேசிறி தகவல்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க ஆதரவாளர்களின் இரையாக மாறி விட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள்
இலங்கை ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறுவது அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியாக நன்மையளிக்காது என்பதால், அமெரிக்க ஆதரவாளர்கள் சிலர், ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஆதரவாளர்களின் பொறியில் சிக்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானங்கள் காரணமாக ரஷ்யாவில் மானிய விலை கொள்வனவு செய்யப்படும் எரிபொருளை இந்தியாவிடம் இருந்து அதிக பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர், உலகில் ஏனைய நாடுகளின் உதவிகளை பெற முடியும் என நம்பிய போதிலும் இறுதியில் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்து வந்த இருத்தரப்பு உறவுகள் சீர்குலைந்தன எனவும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.