உலகில் மனித குலம் சந்திக்கவுள்ள பாரிய அபாயம்! அச்சத்தை சந்திக்கும் நாட்கள்
உலக யுத்தம் ஒன்றின் விளிம்புக்கு மனித இனம் சென்று திரும்பிய ஒரு காட்சி 2021 ஏப்ரல் இறுதியில் அரங்கேறியிருந்தது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அதிக அளவில் துருப்புகளை தனது எல்லைகளுக்கு ரஷ்யா நகர்த்த ஆரம்பித்திருந்த காட்சி ஊடகங்களில் வெளிவந்து, உலக மாந்தர் மனங்களில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்த ஆரம்ப்பித்திருந்தது.
அமெரிக்கா தனது இரண்டு 'டிஸ்ரோயஸ்' போர்க்கப்பல்களை கருங்கடல் பிராந்தியத்துக்கு அனுப்பிவைக்கப் போவதான எச்சரிக்கைகள் வெளியாகின.
உலக யுத்தம் ஒன்றை மனிதகுலம் சந்திக்கும் அபாயம் நெருங்கிக் கொண்டிருப்பதாக போரியல் ஆய்வாளர்கள் கவலையுடனும், அச்சத்துடனும் பார்க்கும் ஒரு முக்கியமான சம்பவம் பற்றி ஆராய்கின்றது இந்த ஒளியாவணம்: