உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கும் அமெரிக்கா! தீவிரமடையும் போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது.
ஆனாலும் உக்ரைன் இராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன.
உக்ரைனுக்கு உதவும் நாடுகள்
உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய .ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவ உதவி
புதிதாக வழங்கப்படும் இந்த இராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷ்யாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன்](https://cdn.ibcstack.com/article/daa68326-576a-4d7f-abe0-3a5f7bbd4047/25-677f68f42bc97-md.webp)
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 12 மணி நேரம் முன்
![ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா?](https://cdn.ibcstack.com/article/0154e360-f262-40d1-b24b-78a1b556db5b/25-677f74c098140-sm.webp)
ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா? Cineulagam
![அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்... பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம்](https://cdn.ibcstack.com/article/8aeefdff-d3b9-4529-9051-9eecde30a018/25-677fa28855963-sm.webp)
அர்னவ், விஷால் யாருமே இல்லை என்னுடைய காதலர்... பிக்பாஸ் 8 அன்ஷிதா வெளிப்படையாக கூறிய விஷயம் Cineulagam
![Singappenne: ஆனந்திக்கு வந்த ஆபத்து- மருத்துவமனையில் அன்பு அம்மா.. மகேஷ்வுடன் உறவு முடிந்துவிடுமா?](https://cdn.ibcstack.com/article/3313923b-f09b-41f7-ab0d-e6e3a0da2247/25-677ec058dea4f-sm.webp)