தீவிரமாகும் போர்களம்!லட்சக்கணக்கான துருப்புக்களை களமிறக்கும் ரஷ்யா:தோல்விகளை பரிசளிக்கும் உக்ரைன்
உக்ரைன் மீது பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ள நான்கு இலட்சம் துருப்புக்களை ரஷ்யா களமிறக்கும் என விளாடிமிர் புடினின் ஆலோசகர் டிமிட்ரி சுஸ்லோவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்கு நாடுகளின் ஆயுத விநியோகம் குறைவடையும் பொழுது ரஷ்யா பலமான எதிர்தாக்குதலை தொடங்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துருப்புகளுக்கு போர் பயிற்சி
இதேவேளை கீவ் மீதான தாக்குதலில் தோல்வியுற்ற பிறகு பலமான எதிர்தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உக்ரைன் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்காக 40,000 துருப்புகளுக்கு போர் பயிற்சியளித்து வருகிறது.
இதன்போது போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கிவ்வின் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு முன்னதாக இராணுவ உதவியை முடுக்கிவிட்டன. ஆனால் அவை எப்போது தொடங்கும் என்பது வெளியிடப்படவில்லை.