பூமியில் நரகம்! வீதிகளில் உடலங்கள்! ரஷ்யர்களிடம் சரணடையாத மரியுபோல் நகரம்!(காணொளி)
உக்ரைனின் மரியுபோல் நகரம்,பூமியில் நரகம் போல காட்சியளிப்பதாக உக்ரைனின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரம் ரஷ்ய படைகளால் சூழப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் வழிகள் மூடப்பட்டுள்ளன.
மரியுபோல் நகர மக்கள் சரணடைந்தால் மனிதாபிமான உதவி வழிகளை திறந்துவிடுவதாக ரஸ்ய படையினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
எனினும் இறுதி படைவீரர் இருக்கும் வரை சரணடைய முடியாது என்று மரியுபோல் நகரை பாதுகாக்கும் உக்ரைன் படையினர் அறிவித்துவிட்டனர்.
சுமார் 300,000 குடியிருப்பாளர்கள் மின்சாரம், நீர் அல்லது வெப்பமூட்டும் வசதியின்றி நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் குறைவாக இருப்பதால், மக்கள் பட்டினி கிடப்பது மற்றும் நோய்கள் பரவுவதால் நெருக்கடி மோசமடையக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
நிலம், வான் மற்றும் கடல் ஆகியவற்றில் இருந்து நகரத்தின் மீது ரஷ்யா தனது இடைவிடாத தாக்குதலைத் தொடர்வதால், குடியிருப்பாளர்கள் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை தங்குமிடங்கள் மற்றும் அடித்தளங்களில் செலவிடுகிறார்கள்.
நகரத்தின் 80% குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
இறந்தோரின் உடலங்களை மீட்பது மிகவும் ஆபத்தானது என்பதால் அவை தெருக்களிலேயே கிடத்தப்பட்டுள்ளன.
சில உடலங்கள் மாத்திரம் பொதுவான புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் பயங்கரமான பேரழிவு நகரமாக மரியுபோல் மாறியுள்ளது என்பதை ஒரு ரஷ்ய இராணுவ ஜெனரல் கூட ஒப்புக்கொண்டார்.
எனினும் தமது படைகளாலேயே இது மேற்கொள்ளப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan