ரஷ்யா சமாதான முனைப்புக்களை மலினப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டு
ரஷ்யா சமாதான முனைப்புகக்ள மலினப்படுத்த முயற்சிப்பதாக உக்ரன் அரசாங்கம் அதிகாரபூர்வமாக குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நோவ்கொரோட் பகுதியில் உள்ள இல்லத்தை உக்ரைன் படையினர் தாக்க முயன்றதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு, “உக்ரைன் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான காரணத்தை உருவாக்கவும், பொய்யான நியாயங்களை ஏற்படுத்தவும் எடுக்கும் முயற்சி என தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி செயல்முறையை சிதைக்க ரஷ்யா மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவின் வழக்கமான தந்திரமே இது. தாங்கள் செய்கிற அல்லது செய்ய திட்டமிடுகிற காரியங்களை மற்றவர்கள்மீது குற்றம் சாட்டுவது,” என சிபிஹா சுட்டிக்காட்டினார்.
மேலும், “தாக்குதல் நடத்தும் ஆக்கிரமிப்பாளருக்கும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நாட்டிற்கும் இடையில் எந்தவிதமான பொய்யான சமநிலையும் உருவாக்க முடியாது,” என வலியுறுத்தியுள்ளார்.
அமைதியை நோக்கி முன்னேறும் முயற்சிகளை பாதிக்கக் கூடிய ரஷ்யாவின் தூண்டுதல் நிறைந்த அறிக்கைகளை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலில், இத்தகைய குற்றச்சாட்டுகள் அமைதி பேச்சுவார்த்தைகளை தடை செய்யும் நோக்கத்துடன் வெளியிடப்படுவதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.