ரஷ்யா அனுப்பிய நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்: வலுவிழக்கும் உக்ரைன்
138 ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா நடாத்திய தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல்களில் பலியான பெண் உக்ரைனின் கெர்சன் நகரை சேர்ந்தவர் என்பதோடு இதில் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
இது தொடர்பில் உக்ரைனின் விமானப்படை கூறுகையில், ரஷ்யா ஒரே இரவில் 138 ஏவுகணைகளை ஏவியதாகவும் அதில் 88 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடுமையான குளிர்காலம்
சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் எஞ்சிய பகுதிகள் உக்ரைன் தலைநகர் மீது விழுந்ததில் ஒரு மருத்துவமனையும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, உக்ரைனின் டன்பாஸ் (Donbas) பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோல்னே (Rozdolne) கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் கடுமையான குளிர்காலத்தில் நுழையும்போது இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி முடிந்த கையோடு போட்டியாளர்கள் எங்கே சென்றுள்ளார்கள் பாருங்க... போட்டோ இதோ Cineulagam
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan