ரஷ்யாவால் விடுவிக்கப்பட்ட பிரித்தானிய போர்க் கைதிகள் - முதல் படம் வெளியானது
ரஷ்யாவால் விடுவிக்கப்பட்ட 10 போர்க் கைதிகளின் முதல் படம் வெளியாகியுள்ளது.
அவர்களில் ஐந்து பிரித்தானிய பிரஜைகளும் அமெரிக்கா, ஸ்வீடன், குரோஷியா மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த மற்ற கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை ஏற்றிச் சென்ற விமானம் ராஜ்ஜியத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், கைதிகளை அடையாளம் காணவில்லை என்றும் சவுதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#فيديو_واس pic.twitter.com/r1rO4NRRej
— واس الأخبار الملكية (@spagov) September 21, 2022
قامت الجهات المعنية في المملكة باستلامهم ونقلهم من روسيا إلى المملكة، والعمل على تسهيل إجراءات عودتهم إلى بلدانهم؛ وهي الولايات المتحدة والمغرب والمملكة المتحدة والسويد وكرواتيا.#واس
— واس الأخبار الملكية (@spagov) September 21, 2022
எவ்வாறாயினும், ரஷ்யப் படைகளால் பிடிபட்ட 28 வயதான பிரித்தானிய பிரஜை ஐய்டன் அஸ்லின் விடுவிக்கப்பட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஜென்ரிக் உறுதிப்படுத்தினார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் சவூதி அரேபிய மத்தியஸ்தத்தின் முயற்சிகளை அடுத்து கைதிகள் ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
I thank @ZelenskyyUa for his efforts to secure the release of detainees, and Saudi Arabia for their assistance.
— Liz Truss (@trussliz) September 21, 2022
Russia must end the ruthless exploitation of prisoners of war and civilian detainees for political ends.
ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து பிரித்தானிய பிரஜைகள் விடுதலை
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் சிறை பிடிக்கப்பட்டிருந்த ஐந்து பிரித்தானிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்து ஐந்து பேரினதும் அவர்களின் குடும்பங்களுக்கும் பல மாதங்களாக நீடித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் துன்பம் முடிவுக்கு வரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதிகளை விடுவிக்க உதவிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் சவுதி அரேபியாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
போர்க் கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளை அரசியல் நோக்கங்களுக்காக இரக்கமற்ற முறையில் சுரண்டுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐடன் அஸ்லினும் விடுதலை
இதனிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐடன் அஸ்லின் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவர் என்பதை சுகாதார அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் உறுதிப்படுத்தியுள்ளார்.
I am delighted that my constituent, Aiden Aslin, and the other British prisoners of war held captive by the Russian authorities have finally been released and are on their way back to the UK. 1/3
— Robert Jenrick (@RobertJenrick) September 21, 2022
28 வயதான அஸ்லின், ஷான் பின்னருடன் ஏப்ரல் மாதம் உக்ரேனிய கடற்படையினருடன் சண்டையிட்டபோது பிடிபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், ஐடன் அஸ்லின் எம்.பி., ராபர்ட் ஜென்ரிக், விடுவிக்கப்பட்ட கைதிகளில் இருப்பதை உறுதிப்படுத்திய போதிலும், இங்கிலாந்து அரசாங்கம் அவர்களைப் பெயரிடவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.