ரஷ்யாவின் சரமாரி ஏவுகணை தாக்குதலால் அதிரும் உக்ரைன்! சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள டிரோன்கள்
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் உக்ரைனின் 90 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டு மேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஒரே நாளில், 85 ஏவுகணைகள் மூலமும், 63 முறை பல ராக்கெட் அமைப்புகள் மூலமும், 35 முறை வான்வெளியாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து சுமார் 120 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களும், 10 முக்கிய உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கிய போலந்து எல்லை
அதேநேரம், ரஷ்யா ஏவிய 69 ஏவுகணைகளில் 54 ஏவுகணைகளையும், 16 டிரோன்களில், 11 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கடல் வழியாகவும் வான் வழியாகவும் சரமாரியாக 120 ஏவுகணைகள் செலுத்தி உக்ரைனில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கீவ் நகரின் 40 சதவீத மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது.
போலந்து எல்லையின் அருகே உள்ள நகரங்களான லிவிவ், கார்க்கிவ் ஆகியவை முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் வாயிலாக கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்சிச்கோ இதனை உறுதி செய்துள்ளார்.
இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைன் இராணுவம் முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.