ரஷ்யாவில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள 500 இலங்கையர்கள்! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவில் இலங்கையை சேர்ந்த சுமார் 500 பேர் அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்தியர் ஒருவரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் சிக்குண்ட இலங்கையர்களே இவ்வாறு அடிமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றச்செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட பெரு நகர பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக இந்த இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் ஊடாக அண்மையில் ரஷ்யா நோக்கி பயணித்திருந்தனர்.
இருப்பினும், இவ்வாறு சென்ற இலங்கையர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவை போன்று தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும், அவர்கள் பன்றி பண்ணைகளில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அசமந்தம்
குறித்த இலங்கையர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாத நிலையில் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, சுமார் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் கடவுச்சீட்டுக்களை தொழில் வழங்கும் நபர்கள் தம்வசம் வைத்துக்கொண்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 21 நிமிடங்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
