பிரித்தானியாவில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்: தீவிரமாகும் பாதுகாப்பு விசாரணை
ரஷ்யாவிக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் பிரித்தானியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவரும் பல்கேரிய பிரஜைகள் எனவும் இவர்களில் இருவர், பிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் அரோப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தவறான நோக்கத்துடன் கூடிய அடையாள ஆவணங்களை வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மேலும் அவை போலியானவை என்பதும் பிரித்தானிய பாதுகாப்பு துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும், ரஷ்ய பாதுகாப்பு சேவையில் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் பிரித்தானிய, பல்கேரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, ஸ்லோவேனியா, கிரீஸ் மற்றும் செக் குடியரசுக்கான கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
