56 கனேடியர்களுக்கு ரஷ்யா விதித்த அதிரடி தடை
கனடாவில் உள்ள 56 குடிமக்களுக்கு ரஷ்யாவானது அதிரடி தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரஷ்யா இந்த தடையை விதித்துள்ளதாக மாஸ்கோ வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த பட்டியலில் உள்ளவர்கள் "OUN-UPA மற்றும் கலீசியா பிரிவைச் சேர்ந்த ஹிட்லரின் ஆதரவாளர்களை புகழ்ந்து பேசும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என ரஷ்யா காரணம் வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய தேசியவாத சக்தி
அத்துடன் (கனடிய) அதிகாரிகளால் தூண்டப்பட்ட ருஸ்ஸோபோபிக் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்பவர்கள் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
OUN-UPA என்பது உக்ரேனிய தேசியவாத சக்தியாகும், இது இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பின் போது சோவியத் ஆட்சிக்கு எதிராகப் போராடிய அமைப்பாக கருதப்படுகிறது.
மேலும், கலீசியா பிரிவு என்பது சோவியத்துக்கு எதிராகப் போராட ஜேர்மன் நாஜி கட்சியின் ''வாஃபென் SS கார்ப்ஸால்'' ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உக்ரேனிய தன்னார்வப் படை என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
