அமெரிக்கப் படைகள் துரத்தும் எண்ணெய் கப்பல்! களத்தில் இறங்கிய ரஷ்யா
அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கப் படைகளால் துரத்தப்படுவதாக கூறப்படும் எண்ணெய் கப்பல் ஒன்றை பாதுகாக்க ரஷ்யா கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று குறித்த ரஷ்ய கப்பல் ஸ்கொட்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் இருப்பதாகக் கருதப்பட்டது.
எண்ணெய் கப்பல்கள்
முன்னதாக, வெனிசுலாவிற்குள் நுழைந்து, அங்கிருந்து வெளியேறும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களை "முற்றுகையிடுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் கரீபியனில் பெல்லா 1 என்ற கப்பல், அமெரிக்கத் தடைகளை மீறி, வெனிசுலாவுக்கு ஈரானிய எண்ணெயை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்தக் கப்பலைக் கைப்பற்ற உத்தரவிடப்பட்டது.
எனினும்,அது வியத்தகு முறையில் அந்த கப்பல் தமது பாதையை மாற்றியது - அதே போல் அதன் பெயரை மரினேரா என்றும் மாற்றியது. இந்த சூழ்நிலையில், கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை "கவலையுடன் கண்காணித்து வருவதாக" ரஷ்யா கூறுகிறது.
இராணுவ நடவடிக்கைகள்
இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகள் CBS செய்தியிடம் அமெரிக்கப் படைகள், குறித்த கப்பலில் ஏறத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர் வோஷிங்டன் அதை மூழ்கடிப்பதற்குப் பதிலாக கைப்பற்ற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, இங்கிலாந்தில் இருந்து எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் தொடங்கப்படுவதற்கு முன்னர், வோஷிங்டன் இங்கிலாந்துக்கு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இப்போதைக்கு, மற்ற நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இதேவேளை, தற்போது, தமது கப்பல் ரஷ்ய கூட்டமைப்பின் கொடியின் கீழ் வடக்கு அட்லாண்டிக்கின் சர்வதேச நீரில் பயணிக்கிறது என்றும் சர்வதேச கடல்சார் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கி செயற்படுகிறது என்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri