நேட்டோ இராணுவத்தின் அச்சுறுத்தலினாலே போர் தொடர்கிறது: பாதுகாப்பு பகுதி தொடர்பில் புடின் விளக்கம்
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் சர்வதேச இராணுவத்தின் அச்சுறுத்தலானது ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே போரானது இடைவிடாது தொடர்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே புடின் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கார்கிவ் தாக்குதல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றோம்.
மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருகிறது. கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை.
அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை (BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது.
எனவே இரண்டு நாடுகளுக்குமாக ''BUFFER ZONE'' உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்" என்றார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |