ரஷ்யாவின் தாக்குதலை சந்திக்க மேற்குலகம் தயாராக இருக்கவேண்டும்
உக்ரைன் போரில் தனது இராணுவ வீரர்களின் இழப்பை ரஷ்யா(Russia) சந்தித்தபோதும், மேற்கு நாடுகளை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை புடின் தரப்பு கற்றுக்கொள்கிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ரஷ்ய படைகளின் இறப்பு எண்ணிக்கை 465,000க்கும் அதிகம் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க இராணுவத்தின் V Corps படை போலந்தில் நிலைகொண்டுள்ள நிலையில் அதன் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் கோஸ்டான்சா ரஷ்யா இராணுவம் குறித்து மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவம்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
''உக்ரைன் படையெடுப்பிற்கு முன்பிருந்தே ரஷ்யாவின் இராணுவம் பலத்த துருப்பு இழப்புகளை சந்தித்துள்ளது. மேலும், மேற்கத்திய போர் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக் கொள்கிறது.
ரஷ்யா நிறைய இழப்புகளை சந்திக்கிறது. அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மறுகட்டமைப்பதற்கும் சிறிது நேரம் எடுக்கும் என்ற தவறான எண்ணம் கொஞ்சம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எனக்கு அந்த பார்வை இல்லை. ரஷ்யாவின் படைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மேற்கத்திய நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
எவ்வாறு நவீன தாக்குதலை தோற்கடிப்பது என்பதை ரஷ்யா கற்றுக் கொள்கிறது. மேலும் நாங்கள் விரைவில் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
