ஒரே செய்தி மாநாட்டில் உக்ரைன் தொடர்பில் இலங்கையின் கூற்றை நிராகரித்த ரஷ்யா
ரஷ்ய மற்றும் உக்ரைன் போர் முனைக்கு இலங்கையிலிருந்து முன்னாள் இராணுவ பணியாளர்கள் கடத்தப்படுவது குறித்து இலங்கையின் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் கருத்தை, ரஷ்ய தூதுவர் நிராகரித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடந்த ஒரு செய்தி மாநாட்டின் போது அவர் இந்த கூற்றை நிராகரித்துள்ளார்.
இந்த செய்தி மாநாட்டில் தாரக பாலசூரியவும் இலங்கைக்கான ரஸ்ய தூதுவரும் பங்கேற்றனர்.
இதன்போது போர் முனைக்கு ஆட்கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமர் செலென்ஸ்கியுடன் பேசியதாக தாரக பாலசூரிய குறிப்பிட்டார்.
எனினும் பாலசூரியவை அடுத்து உரையாற்றிய ரஸ்ய தூதுவர் லெவன் தாகாரியன் (Levan Dzhagaryan), பாலசூரியவின் கூற்றில் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தார்.
செலென்ஸ்கியின் பதவி காலம்
உண்மையில், செலென்ஸ்கி உக்ரெய்னின் ஜனாதிபதி அல்ல, அவர் உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த நாட்டிற்கு இப்போது ஜனாதிபதி யார் என்று கூட தமக்கு தெரியாது என்று தாகாரியன் கூறினார்.
2024 மே 21 ஆம் திகதியுடன் செலென்ஸ்கியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது இனி உக்ரைனின் ஜனாதிபதி அல்ல என்று ரஸ்ய தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தநிலையில் உண்மை நிலவரப்படி, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் செலென்ஸ்கியின்; பதவி காலம் மே 20 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் பாதுகாப்பு நிலைமைகள் தேர்தல்களை நடத்த அனுமதிக்கும் வரை அவர் தனது பதவியில் இருப்பார் என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |