ரஷ்யா - வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்: புடினை சந்திக்கும் கிம் ஜாங் உன் - செய்திகளின் தொகுப்பு
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள
உள்ளதாகவும்,
ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான
சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியை அமெரிக்காவின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன், ரஷ்யாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் தொடருந்தில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விபரம் கிடைக்கவில்லை. ஆனால் பசுபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
