இந்தியாவுக்கு புதிய அதிகாரம்: அமெரிக்காவை குறிவைத்த ரஷ்யா
அமெரிக்காவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு திட்டம் தொடர்பான ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையானது உலக அரசியலில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த யோசனைக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இணக்கம் தெரிவித்தால், ஐ.நா. பாதுகாப்பு சபைக்குள் இரண்டாவது ஆசிய நாடக இந்தியா உள்நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய விதிகள்
எனிலும், இந்த விடயம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு அந்நாடுகளின் அந்நிய பாதுகாப்பு கொள்கை விவகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
அந்த வகையில் ஐ.நா பாதுகாப்பு சபையில் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாக ஆசிய நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த செர்ஜி லாவ்ரோவ், "உலகின் பெரும்பான்மையானவர்கள் மேற்கத்திய விதிகளின்படி வாழ விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
தற்போது வரை அமெரிக்கா பாதுகாப்பு சபையில் சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகள் மாத்திரமே நிரந்தர நாடுகளாக காணப்படுகிறது.
சர்வதேச அரசியல்
இந்நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள்தான் சர்வதேச அரசியலை தீர்மானிக்கும்.
அதேபோல இவர்கள் கொண்டுவரும் தீர்மானத்தை தடை செய்யும் அதிகாரமும் இந்த 5 நாடுகளுக்கு மாத்திரமே காணப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதை போல நடந்தால் ஆசிய வளையத்தில் இந்தியாவின் கைகள் ஓங்கும் என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
