ரஷ்யாவின் யுத்த குற்றங்கள் தொடர்பில் உக்ரைன் வெளியிட்டுள்ள தகவல்
ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது என உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் கெர்ஷன் பகுதியில் விட்டுச் சென்ற 400க்கும் அதிகமான மறைக்கப்படாத யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்படாத யுத்த குற்றங்கள்

கெர்ஷன் பகுதியில் ரஷ்ய படையினர் வெளியேறிய பின்னர், அங்கு பொதுமக்கள் மற்றும் படையினரின் சடலம் காணப்பட்டதாக வொலோடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரிகள் கெர்ஷன் நகருக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், பயணத் தடையையும் விதித்துள்ளனர்.
குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்

ரஷ்ய இராணுவம், மற்றைய பகுதிகளை விட்டுச் சென்றது போன்றே கெர்ஷனிலும் யுத்த குற்றங்களை செய்துள்ளது. எந்தவொரு சந்தேகமும் இன்றி குற்றவாளிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து புச்சா, இஸியம் மற்றும் மரியபோல் ஆகிய நகரங்களில் இருந்து மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri