உக்ரைன் மீது ரஷ்யா நெருப்பு மழை தாக்குதல்! அதிகரிக்கும் போர் பதற்றம்
ரஷ்ய படைகளின் குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு பயந்து, செவெரோடோனெட்ஸ்க் நகரில் உள்ள ஒரு இரசாயன ஆலை பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த ஆலை பெரிய நகரத்தையொட்டி அமைந்திருப்பதால் இது மரியபோல் உருக்கு ஆலையை விட பாதுகாப்பானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உக்ரைன் கிராமங்கள் மீது ரஷ்ய இராணுவம் நெருப்பு மழை பொழிந்த காணொளியும் வெளியாகி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அடுத்தடுத்து வெளியாகியுள்ள காணொளிகள்
உக்ரைன் ரஷ்யா போரானது 100வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து வெளியேறி தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸின் கிராமப்பகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கிழக்கு உக்ரைன் பகுதிகளை முழுவதுமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் ரஷ்ய இராணுவம் தீவிரம் காட்டிவரும் நிலையில், இதற்கு உக்ரைன் உலக நாடுகளின் உதவியுடன் பதிலடி கொடுத்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், கிழக்கு உக்ரைனின் கிராமப் பகுதி ஒன்றில் ரஷ்ய இராணுவம் பயங்கரமான ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், ரஷ்ய இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல், நெருப்பு மழைக் காட்சிகள் போன்ற காணொளிகள் வெளியாகி போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.