அமெரிக்க அதிகாரிகள் 61 பேருக்கு அதிரடியாக பொருளாதார தடை விதித்த ரஷ்யா
ரஷ்யா மேலும் 61 அமெரிக்க அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.
முன்னணி பாதுகாப்பு மற்றும் ஊடக நிர்வாகிகளுக்கு இவ்வாறு பொருளாதார தடை விதித்துள்ளதுடன், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதையும் தடை செய்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை விதித்துள்ளவர்களின் பட்டியல்
இந்த பட்டியலில் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள், ஊடக தளங்கள், தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விமானம் மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தனிப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள் பட்டியலில் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லென், வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் மற்றும் தடைகள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவர் ஜேம்ஸ் ஓ பிரையன் ஆகியோர் அடங்குகின்றனர்.
குறித்த பட்டியலில் பெரும்பான்மையான அமெரிக்க செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அரசாங்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், இராணுவப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.