ரஷ்ய எரிபொருள் நெருக்கடி: சீன மின்சார வாகனங்களுக்கு திடீர் கேள்வி
உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் கடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
இதனால், மொஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள வாகன ஓட்டிகள் சீன மின்சார வாகனங்களை (EV) வாங்குவதற்குப் படையெடுத்து வருகின்றனர்.
மின்சார வாகனங்களின் ஆதிக்கம்
முன்பு மாதத்திற்கு 2 அல்லது 3 மின்சாரக் கார்களை மட்டுமே விற்று வந்த மொஸ்கோ கார் விற்பனை நிலையமொன்று, தற்போது நாளொன்றுக்கே 2 முதல் 3 கார்களை விற்பனை செய்து திணறி வருகிறது.
ரஷ்ய சந்தையில் கீலி, டோங்ஃபெங் போன்ற சீன நிறுவனங்களின் மின்சார வாகனங்களே தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றன.

ரஷ்யாவின் கடுமையான குளிர்காலம் மற்றும் போதிய சார்ஜிங் வசதிகள் இல்லாதது சவாலாக இருந்தாலும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்சார வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதேவேளையில், சில வாகன ஓட்டிகள் தங்களது கார்களை மலிவான இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களாகவும் மாற்றி வருகின்றனர்.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri