ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் இன்றையதினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரில் தீவில் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
142 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின என்றும் இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருவில் நிலநடுக்கம்
இதேவேளை, பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் 5.3ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
