ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை மாற்றியமைத்த ரஷ்யா!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடைசெய்துள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாக்களிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா, தமது வீட்டோ அதிகாரத்தை கொண்டுள்ளமையால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
உக்ரைன் எதிர்கொள்ளும் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக விவாதத்தின் போது, ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், ஐயர்லாந்து, இங்கிலாந்து, நோர்வே, ஐபீரியா, ஜப்பான், மெக்ஸிகோ, பிரேசில், கானா, கென்னியா ஆகிய நாடுகள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
அத்தோடு இத்தீர்மானத்திற்கு எதிராக ஒரு வாக்கு பதிவாகியுள்ளது. அதுவும் ரஷ்யா வீட்டோ எனப்படும் அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.