உக்ரைனை தாக்க தயாராகும் மேற்கத்திய ஏவுகணைகள்!
தமது நாட்டின் மீது உக்ரைன் நடத்திய ஏவுகனை தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா தனது புதிய ஓரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
கசகஸ்தானில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் முன்னாள் சோவியத் நாடுகளின் பாதுகாப்புக் கூட்டணியின் தலைவர்கள் முன்னிலையில் புடின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் உக்ரைனின் பிரதான அரசாங்க மையங்களை இலக்குவைத்த நடத்தப்படும் என அவர், எச்சரித்துள்ளார்.
33 மாத கால யுத்தம்
33 மாத கால யுத்தத்தின் போது ரஷ்யா இதுவரை உக்ரேனிய அரசாங்க அமைச்சுக்கள், நாடாளுமன்றம் அல்லது ஜனாதிபதி அலுவலகத்தை தாக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எனினும், ரஷ்ய பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நாங்கள் நீண்ட தூர மேற்கத்திய ஏவுகணைகள் மூலம் பதிலளிப்போம் என கூறியுள்ளார்.
தற்போது, தமது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இராணுவ பணியாளர்கள் உக்ரைன் பிரதேசத்தின் தாக்குதல் இலக்குகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக புடின் விளக்கமளித்துள்ளார்.
இவை இராணுவ வசதிகள் கொண்ட மையங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அல்லது கிவ்வில் உள்ள முடிவெடுக்கும் மையங்களாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
