ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் நேற்று (06.05.2026) மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அம்பலவாணர் சோதிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கஜானி பார்த்தீபனும், கெளரவ விருந்தினராக Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சியும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் விருந்தினர்களால் கண்காட்சிக் கூடங்கள் நடாவினை வெட்டி ஆரம்பிக்கப்பட்டு பார்வையிடப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து, வரவேற்புரை உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினியாலும், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரனால் ஆற்றப்பட்டது.






