ஸ்டெலிங் பவுண்க்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபா
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கமைய ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவும் கொள்வனவு விலை 379 ரூபாவாகும் பதிவாகி உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்வனவு விலை 325 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபாவாகவும் கொள்வனவு விலை 313 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 240 ரூபாவாகவும் கொள்வனவு விலை 230 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
இலங்கையில் டொலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
