ட்ரம்பின் வரிக்கொள்கையால் வெள்ளியின் விலையிலும் மாற்றம்
அமெரிக்காவின் வரிக்கொள்கை காரணமாக சர்வதேச சந்தையில்; பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஏற்கனவே எரிபொருள் உட்பட்ட பல்வேறு நுகர்வுப்பொருட்களின் விலை பாரியயவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பும் தங்கத்தின் விலையிலும் சர்வதேச மற்றும் இலங்கை அளவில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வெள்ளியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 டொலர்களாக அதிகரிக்கக்கூடும்
இதன்படி சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் வெள்ளியின் விலையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரிக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலையுயர்வு காரணமாக, வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சந்தைத்தரப்பு தகவல்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3வீத அதிகரிப்புடன்; 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
இது 42 டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு இந்த விலையுயர்வு, 2011 செப்டெம்பருக்கு பின்னர் வெள்ளிக்கு கிடைத்த அதிகபட்ச விலையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




