மக்களுக்கு முன் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஆட்சியாளர்கள்
தமக்கு முன்னர் நாடே முதன்மையானது என மார்த்தட்டி கொண்ட சில ஆட்சியாளர்கள், கோவிட் 19 தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்கும் முன்னர் தாம் செலுத்திக்கொண்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் நடமாடும் சேவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமது பாதுகாப்பை மாத்திரம் சிந்தித்து செயற்படுவதற்கு பதிலாக முழு நாட்டு மக்களை கோவிட் 19 வைரசிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
