ரூ.285 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்த நுகர்வோர் விவகார அதிகாரசபை
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இருந்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) ரூ.285 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட 21,000 சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
முறைப்பாடுகளில் சுமார் 79வீதம்
தேவையான தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 223 உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதிரிகளை சோதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் இரும்புக்கம்பி, தேங்காய் எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், அரிசி, பதப்படுத்தப்பட்ட மீன், மிளகாய் தூள், பால், முடி சாயங்கள், பழச்சாறுகள் மற்றும் சிரப்கள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'1977' நுகர்வோர் முறைப்பாடுகள் ஹாட்லைன் மூலம் கடந்த ஆண்டு 5,002 முறைப்பாடுகள் பெறப்பட்டதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெறப்பட்ட முறைப்பாடுகளில் சுமார் 79வீதம் தீர்க்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri