திருகோணமலை மாவட்ட வீதிகள் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு
திருகோணமலை மாவட்டத்தில் வீதிகளுக்கு புனரமைப்பு பணிகளுக்காக 250ரூபா மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மாவட்டத்தில் வசதிகள் குறைவாக உள்ள கிராமங்களை இணைக்கும் வீதிகளை புனரமைத்தல், புதிய பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வான் எல பகுதியில் அமைந்துள்ள இரண்டாம் ஒழுங்கை கிராமத்துக்கு செல்லும் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
வீதிகள் புனரமைப்பு
அத்தோடு, கிராமப்புற வீதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.250 மில்லியன் நிதி, திருகோணமலை மாவட்டம் முழுவதும் பல கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கிராமங்களில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு இந்த திட்டம் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri