அமீரகத்தில் சிறை தண்டனை அனுபவித்து வந்த இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) பல்வேறு இடங்களில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபிக்கான இலங்கைத் தூதரகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தூதரகத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமீரக அரச மன்னிப்பு
ஐக்கிய அரபு அமீரக அரச மன்னிப்பின் கீழ் இவ்வாறு இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி மன்னிப்பு வழங்கப்பட்ட இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக அமீரகத்தின் அரசாங்கம், வெளிவிவகார மற்றும் உள்ளுதுறை அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபிக்கான இலங்கைத் தூதுவர் உதய இந்திரரட்ன இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |