வில்லியமிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைக்க தயாராகும் அரச குடும்பம்
பிரித்தானிய இளவரசர் வில்லியமிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைக்க அரச குடும்பம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச குடும்ப வட்டாரங்களை மேற்கோள் காட்டி, மன்னர் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக பிரித்தானியாவின் செய்தித்தாளில் ஒன்று இந்த தகவலை வெளியாகியுள்ளது.
76 வயதான மன்னர் சமீபத்தில் சாண்ட்ரிங்ஹாம் ரோயல் ஹவுஸில் உள்ள செயிண்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடந்த ஒரு திருப்பலியில் கலந்து கொண்டார்.
மனச்சோர்வடைந்த மன்னர்
இங்கிலாந்து திருச்சபை பாதிரியார் பால் வில்லியம்ஸுடன் நடந்த கலந்துரையாடலின் போது மன்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
"அரசர் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பூஜை சடங்குகளில் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார், ஆனால் இந்த முறை அவர் மனச்சோர்வடைந்தார் என்பது தெளிவாகிறது.
ஒரு கட்டத்தில் அவர் தனது கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்" என்று அரசகுடும்ப வட்டாரங்கள் குறிப்பட்டதாக அந்த செய்தியில் அடிகோடிடப்பட்டுள்ளது.
மன்னரின் புற்றுநோய் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது அரச கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரச பொறுப்புகள்
இதன் காரணமாக, பெரும்பாலான அரச பொறுப்புகள் இளவரசர் வில்லியமிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் இளவரசர் வில்லியம் தனது மனைவி இளவரசி கேட்டை கவனித்துக் கொள்ளும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
அவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இளவரசர் ஹாரி மற்றும் மேகனுடனான நிச்சயமற்ற உறவும் அரச குடும்பத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது தாயார் ராணி எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்லஸ் 73 வயதில் மன்னரானார். ஆனால் இரண்டு வருட குறுகிய காலத்தில் அரியணையை விட்டு வெளியேற வேண்டியதில் அவர் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக அரச அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |