பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக்கோரி கரோலினா தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
வட்டவளை - கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக்கோரி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்குச் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் தாம் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளோம். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணம் கூட இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை.
இதனால் எமது பிள்ளைகள் உட்பட ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட தமது தோட்ட பகுதிக்கு வருகைதந்து தம்மை விசாரிக்கவில்லை.
ஆகவே மேற்படி கோரிக்கைகளுக்கு மலையக அரசியல் தலைமைகள் உடனடி தீர்வை வழங்க வேண்டும் எனவும், தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, ஜூன் மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்குப் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று பிற்பகல் தெரிவித்துள்ளார்.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
