அலரி மாளிகையின் பின்வழி பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது
கொழும்பு அலரி மாளிகையின் பின்வழியாக பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா கார்டன் வீதி பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் அலரி மாளிகையின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கொள்ளுப்பிட்டி ரொடுண்டா கார்டன் வீதி மறிக்கப்பட்டு, அலரி மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் நிலை கொண்டிருந்தனர்.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவ்வாறு மூடப்பட்டிருந்த வீதி இன்று தொடக்கம் மீண்டும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக திறக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையின் பாதுகாப்பு
அலரி மாளிகையின் பின்புற வழியாக பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா வீதி திறக்கப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அலரி மாளிகைக்கு வரும் வௌியார் வாகனங்களை இனி வரும் காலங்களில் பேரை வாவி அருகில் நிறு்த்தி வைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவே வாங்கும்போது இந்தியாவிற்கு உரிமை உண்டு.., ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புடின் விளக்கம் News Lankasri